Fitness
உங்கள் உடல் எடை எவ்வளவு என்பதை விட அந்த உடல் உங்களுக்கு ஒத்துழைக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது சில எளிமையான உடற்பயிற்சிகளுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காவிட்டால் வரும் காலங்களில் எப்போதும் உடல் ஒத்துழைக்க போவதில்லை என்பதை மறவாதீர்கள்.
ஒரு புஷ்-அப், புல்-அப், பிளாங்க் போன்ற பயிற்சிகளை செய்ய உங்கள் உடல் ஒத்துழைக்காவிட்டால் அதனால் ஏற்படப்போகும் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவனிக்க வேண்டிய நேரம் இது. உடல் உபாதைகளான, எலும்பு முறிவு, தண்டுவட பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.
புஷ்-அப்: ஆணோ, பெண்ணோ எந்த பாலின வேறுபாடுமின்றி இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்கள் உடலின் மேற்புரம், தோள்பட்டைகள், நெஞ்சுப்பகுதி ஆகியவற்றை வலிமையாக்க இந்த பயிற்சியில் தினம்தோறும் ஈடுபடுகின்றனர். முதலில் இதை ஒரு முறை முயற்சித்து பார்த்த பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம். கூடுதல் பயிற்சிக்காக உடலில் கூடுதல் எடையை கட்டிக்கொண்டு பயிற்சி எடுப்பதின் மூலம் உங்கள் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் போதிய வலிமை கிடைப்பதை உறுதி செய்யலாம்.
மிக எளிமையான உடற்பயிற்சி நிறைய உள்ளன தங்கள் உடம்பிற்கு எது என்பதனை பார்த்து தாங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் 🙏🤼
No comments:
Post a Comment