Welcome to My Blogger Site💐

Sunday, September 1, 2024

கேரளா குழாய் புட்டு

குழாய் புட்டு 

சமைக்க தேவையான பொருட்கள் !

புட்டு மாவு(அரிசி மாவு) – 1 கப்

தேங்காய் – 1/2 மூடி

உப்பு – சிறிது

ஏலக்காய் – 2

தண்ணீர் – சிறிது

சீனி – தேவைக்கு

செய்முறை!

ஒரு பவுலில் மாவு, உப்பு, இடிச்ச ஏலக்காய், சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரியாக பிசையவும்..தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகி விடக் கூடாது. மாவு மாவாகவே இருக்க வேண்டும். ஆனால் மாவில் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும். மாவு உதிரியாக இருக்கும். 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.

தேங்காயினை துருவி வைக்கவும்.

புட்டு மேக்கரில் முதலில் சிறிது தேங்காய் பூ போடவும் அதன் மேல் மாவை போடவும் அதன் மேல் தேங்காய் பூ என்று மாற்றி மாற்றி போடவும்.

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் அடுப்பில் வைக்கவும். புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். 5 நிமிடத்தில் புட்டு ரெடி ஆகிவிடும். புட்டு மேக்கர் மூடியில் இருந்து நன்றாக ஆவி வந்தவுடன் அடுப்பை அனைத்து புட்டை மெதுவாக எடுக்கவும். 2 அல்லது 3 அடுக்காக புட்டை வைத்து எடுக்கவும்

அழகான நீளமான குழாய் புட்டு தயார். இதனுடன் வாழைப்பழம், சீனி சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.. கேரளா ஸ்பெஷல் குழாய் புட்டு ரெடி

குறிப்பு 

இப்போ உள்ள காலத்தில் அரிசி மாவு மட்டும் இல்லாமல் நவதானியத்திலும் புட்டு மாவு வந்ததுள்ளது. இந்த புட்டு மாவுடன் கடலை கறி வைத்தும் சாப்பிடலாம் வாழபழம் வைத்தும் அப்பளம் வைத்தும் சாப்பிடலாம் சிலர் பச்சபயரை அவைத்து அதனுடனும் சாப்பிடுவர்கள்.

குழந்தைகளுக்கு தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை சேர்த்து குடுக்கலாம்.

No comments:

Post a Comment

40 Breathtaking Wildlife Moments by Arko Saha – The Young Photography📸 Genius from India🇮🇳

40 Magical Wildlife Photos by Arko Saha, India’s 14-Year-Old Photography Prodigy Wildlife photography is usually dominated by experienced e...