Welcome to My Blogger Site💐

Thursday, August 29, 2024

தினமும் தவறாமல் சாப்பிட சொல்லும் பேரிச்சம் பழம் காரணம் இதுதான்🤗

வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.

Type of dates

வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை குளிர் காலங்களில் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி இனி அறியலாம்

எலும்புகள் வலு பெற : குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.

மார்டைப்பு பாதிப்பை குறைக்கும் : 

உடலில் வெப்பநிலை குளிர் காலங்களில் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.

வெதுவெதுப்பாக இருக்க செய்யும் : உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரீச்சம் பழம் தர உதவும். எனவே இதை சாப்பிடுவதால் உங்களை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை : குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடப்பதால் நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான பிரச்சனை உண்டாகாது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.

இனிப்பு பலகாரங்கள் செய்யலாம் : பண்டிகை காலங்களில் நீங்கள் சர்க்கரைக்கு பதில் பேரீச்சம் பழம் சேர்த்து இனிப்பு பலகாரங்களை தயார் செய்யலாம். இதனால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். உங்கள் பண்டிகையும் இனிப்புடன் நிறைவைடையும்.


No comments:

Post a Comment

40 Breathtaking Wildlife Moments by Arko Saha – The Young Photography📸 Genius from India🇮🇳

40 Magical Wildlife Photos by Arko Saha, India’s 14-Year-Old Photography Prodigy Wildlife photography is usually dominated by experienced e...