Welcome to My Blogger Site💐

Tuesday, August 13, 2024

Cumin water -சீரகம் தண்ணீர் நன்மைகள்

சீரகம் தண்ணீர் 

பொதுவாக நம்முடைய கிச்சனில் இருக்கும் பல மசாலா பொருட்கள் நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகளின் சுவையை அதிகரிக்க செய்வதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றன. அத்தகைய மசாலா பொருட்களில் ஒன்று தான் மருத்துவ குணங்கள் பல கொண்ட சீரகம்.

சீரகத்திலும் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தினசரி தேவைப்படும் நார்ச்சத்துக்களில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தில் உள்ளது. இது தவிர, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் சீரகத்தில் உள்ளது. சீரகம் தூள் அல்லது விதைகள் வடிவில் பயன்படுத்தப்பட்டது 

உடல் எடையை குறைப்பதில் மற்றும் கட்டுப்படுத்துவதில் சீரகம் மிகவும் நன்மை பயக்கும். தினசரி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சீரக நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைக்கிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் போராடி வருகிறீர்கள் என்றால் தினசரி காலை இந்த அற்புத நீரை தொடர்ந்து குடித்து வாருங்கள். முன்தினம் இரவே கூட உங்களுக்கு தேவையான அளவு சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து விடலாம். காலையில் இந்த தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த பழக்கம் உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது 🔥🔥🔥


No comments:

Post a Comment

📿🕉️Arudra Darshanam 2025: The Sacred Festival of Lord Nataraja🕉️📿

📿🕉️ Arudra Darshanam 2025: The Sacred Festival of Lord Nataraja🕉️📿 📿Arudra Darshanam is one of the most sacred and spiritually powerful...